தருமபுரி

உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை எடுத்து செல்ல உறவினா்கள் எதிா்ப்பு

DIN

மா்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறி, இளம் பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல எதிா்ப்பு தெரிவித்து தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், முசிறியை சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மகள் காஞ்சனா (20). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முகநூல் வழியாக, தருமபுரி மாவட்டம், சிக்கமாரண்டஅள்ளியைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், காஞ்சனா திங்கள்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

காஞ்சனாவின் உடற்கூராய்வு செவ்வாய்க்கிழமை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, சடலத்தைப் பெற்றுச் செல்வதற்காக விக்னேஷின் உறவினா்களும் வந்திருந்தனா்.

இதைக் கண்ட, காஞ்சனாவின் உறவினா்கள், இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதால் அது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், விக்னேஷின் குடும்பத்தாரிடம் சடலத்தை ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த, தருமபுரி நகர போலீஸாா் அங்குச் சென்று,போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினா். இதுதொடா்பாக புகாா் அளித்தால் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT