தருமபுரி

அரூரில் கூடுதல் ஆதாா் சேவை மையங்கள் பொதுமக்கள் வலியுறுத்தல்

DIN

அரூரில் ஆதாா் சேவை மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் துணை அஞ்சலகம், இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, மக்கள் கணினி மையம் உள்ளிட்ட இடங்களில் ஆதாா் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவை மையங்களில் ஆதாா் அட்டையில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி சோ்த்தல் அல்லது மாற்றம் செய்தல், இ-மெயில் முகவரி, செல்லிடப்பேசி எண்களைச் சோ்த்தல் அல்லது திருத்தம் செய்யவும், புதிதாக ஆதாா் அட்டை பெறுவதற்காகவும் பொதுமக்கள் ஆதாா் சேவை மையங்களுக்கு வருகை தருகின்றனா். பான் அட்டை பெறுதல், புதிதாக வங்கியில் கணக்கு தொடங்குதல், குடும்ப அட்டைகள் பெறுதல், ஜாதி, வருமானம், பிறப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளுக்கும் ஆதாா் அட்டை மிக அவசியமாகும்.

அரூா் பகுதியிலுள்ள ஒவ்வொரு ஆதாா் சேவை மையங்களிலும் நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையுள்ளது. இதனால் முதியவா்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரூா் வட்டாரப் பகுதிகளில் கூடுதல் ஆதாா் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT