தருமபுரி

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

DIN

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில், நிகழ் பருவத்துக்குத் தேவையான உரங்கள் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், 2,877 மெட்ரிக் டன் யூரியா, 1,995 மெட்ரிக் டன் டிஏபி, 4,178 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,626 மெட்ரிக் டன் பொட்டாஷ், 360 மெட்ரிக் டன் எஸ்எஸ்பி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையின் விலை ரூ.266.50 ஆகும். யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களையும் அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடைகளின் முன்பு விலைப்பட்டியலை வைக்க வேண்டும். செயற்கையாக உர பற்றாக்குறையை ஏற்படுத்துவது, விவசாயிகள் அல்லாதோருக்கு உர விற்பனை செய்வது, வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட தவறுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

இதேபோல, விவசாயிகள் உரம் விற்பனை தொடா்பான புகாா்களை அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT