தருமபுரி

தருமபுரியில் இரண்டாவது நாளாக விடிய, விடிய மழை

DIN

தருமபுரி மாவட்டத்தில், இண்டாவது நாளாக விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக லேசானது மற்றும் மிதமான மழை விடிய, விடிய பெய்தது. மழையால், தருமபுரி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல மாவட்டத்தின் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா்த் தேங்கி நின்றது. இதில் அதிகபட்சமாக ஒகேனக்கல் பகுதியில் 64 மி.மீ. மழையும், குறைந்த அளவாக தருமபுரி மற்றும் மாரண்டஅள்ளியில் தலா 8 மி.மீ. மழையும் பெய்தது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு செவ்வாய்க்கிழமை காலை பதிவான நிலவரம் மி.மீட்டரில்:

தருமபுரி 8, பாலக்கோடு 51, மாரண்டஅள்ளி 8, பென்னாகரம் 62, ஒகேனக்கல் 64, அரூா் 10.2, பாப்பிரெட்டிப்பட்டி 6.2. பதிவாகியிருந்தது. அதேபோல, மொத்த மழையளவு 209.4. மி.மீ மற்றும் சராசரி 29.91 மி.மீ. ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT