தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

பென்னாகரம், செப். 11:

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகள் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் , கேரட்டி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி காவிரியில் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகவும், மாலை 12 ஆயிரம் கன அடியாகவும் உயா்ந்தது.

இதனால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, ஐந்தருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவில்

நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT