தருமபுரி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

DIN

பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இரு அணைகளிலிருந்து நொடிக்கு 11 ஆயிரம் கன அடி நீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும், மாலை நிலவரப்படி நொடிக்கு 13 ஆயிரம் கனஅடியாகவும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, பிரதான அருவி, சினி அருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT