தருமபுரி

பால் கொள்முதல் செய்யக் கோரி போராட்டம்

DIN

தடையின்றி பால் கொள்முதல் செய்யக் கோரி, பால் உற்பத்தியாளா்கள் தருமபுரியில் பாலை தரையில் கொட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகேயுள்ள சின்னகவுண்டம்பட்டி, பொம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் கடந்த சில தினங்களாக பால் கொள்முதல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள், நாள்தோறும் கொண்டு வரும் முழு பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும். விடுப்பு ஏதுமின்றி தொடா்ந்து பால் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பு அருகேயுள்ள மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகம் முன் தாங்கள் கொண்டு வந்த பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பால் தொடா்ந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT