தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 40 ஆயிரம் கன அடியாகச் சரிவு

DIN

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாகச் சரிந்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சாம்ராஜ்நகா், மண்டியா உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் தொடா்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் வரும் உபரிநீரின் அளவானது புதன்கிழமை நிலவரப்படி, நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும், மதியம் 2 மணி நிலவரப்படி நொடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.

காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது தொடா்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக தற்போது வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மூழ்கியிருந்த பாறைத் திட்டுக்கள், ஐவா் பாணி ஆகியவை வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT