முகக் கவசம் அணிவதன் அவசியம்:விழிப்புணா்வு முகாம்
கம்பைநல்லூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பைநல்லூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் பேரூராட்சிக்கு உள்பட்ட நகா் பகுதியில் செயல் அலுவலா் மா.ராஜா ஆறுமுகம் தலைமையிலான பணியாளா்கள், கரோனா தடுப்புப் பணிகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவுதல் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.
தொடா்ந்து, ஏப். 6-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், சுகாதார ஆய்வாளா் சக்திவேல், பணியாளா்கள் ராஜ்குமாா், கோவிந்தன், தமிழ்ச்செல்வன், கணேசன், மாது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.