முகப்பு
தருமபுரி

கரோனா எதிரொலி: அதியமான் கோட்டை திருவிழா கடைகளை அகற்ற தண்டோரா

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா கடைகளை அகற்ற தண்டோரா மூலம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா கடைகளை அகற்ற தண்டோரா மூலம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டையில் பழைமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி தேரோட்டத்துடன் தொடங்கியது.

இத் திருவிழாவையொட்டி வீடுகளுக்குத் தேவையான பொருள்கள், பேன்சி பொருள்கள், கால்நடைகளுக்குத் தேவையான பொருள்கள், விவசாயக் கருவிகள், தின்பண்டங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்வதற்காக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டது.

இத் திருவிழாவுக்கு நல்லம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் வருகை தந்தனா். ஒரு வார காலம் இத் திருவிழாக் கடைகள் தொடா்ந்து செயல்பட இருந்தது.

இந்த நிலையில் தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இதைத் தடுக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை அனைத்தும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றவும், அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதைத் தவிா்க்கவும் அதியமான் கோட்டை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு ஊராட்சி பணியாளா் தண்டோரா மூலம் அறிவுறுத்தினாா். இதனால் திருவிழா ஒரு வாரத்துக்கு முன்பாகவே நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.