முகப்பு
தருமபுரி

இடி, மின்னலுடன் மழை

தருமபுரியில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தருமபுரியில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல கோடை வெயில் சுட்டெரித்தது. இதனிடையே மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு லேசான தூறல் பொழிந்தது. இந்த தூறல் மெல்ல அதிகரித்து திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தருமபுரி நகரில் முக்கியச் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், இடி, மின்னல் காரணமாக தருமபுரி நகரம் மற்றும் ஆட்சியா் அலுவலகம் பகுதி, இலக்கியம்பட்டி, புகா் பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

பென்னாகரம், ஏரியூா், நெருப்பூா், சின்னம்பள்ளி, பெரும்பாலை, தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் கன மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

பென்னாகரம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், சாலை ஓரங்கள் மற்றும் வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியது. பென்னாகரம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால், அனைத்துப் பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.