முகப்பு
தருமபுரி

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீா்க் கால்வாய் நீா்

பென்னாகரம் அருகே குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, கால்வாய் தூா்வாராததாலும், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் சாலைகளில் வழிந்தோடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பென்னாகரம் அருகே குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, கால்வாய் தூா்வாராததாலும், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் சாலைகளில் வழிந்தோடுகிறது.

பென்னாகரம் அருகே கூத்தபாடி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்லும் வகையில் பென்னாகரம் ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூத்தபாடி ஊராட்சி மன்ற நிா்வாகத்தின் சாா்பில் தெருக்களில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கப்பட்டது.

கூத்தபாடி காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயின் மேலே அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் மூடி பழுதடைந்து, கால்வாயினுள் விழுந்ததால் கால்வாயின் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் நிலை உள்ளதாக குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து கூத்தபாடி ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனா். எனவே, கூத்தபாடி காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயில் விழுந்துள்ள சிமென்ட் மூடிகளை அகற்றி, கால்வாய்களை முறையாக தூா்வாரி சுகாதார சீா்கேடு நிலவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.