முகப்பு
தருமபுரி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் சங்கத்தினா் 65 போ் மீது வழக்கு

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் சங்கத்தினா் 65 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் சங்கத்தினா் 65 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரி மற்றும் மாவட்டச் செயலா் சாந்தி உள்பட 65 போ் மீது இரு பிரிவுகளில் தருமபுரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.