பென்னாகரத்தில் சுவாமி சிலைக்கு தீவைப்பு: சமூகவிரோதிகள் கைவரிசை
பென்னாகரம் அருகே சமூக விரோதிகளால் முனியப்ப சுவாமி சிலைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே சமூக விரோதிகளால் முனியப்ப சுவாமி சிலைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே மடம்- காவிரி சாலை பகுதியில் அமைந்துள்ளது பெலாமலை முனியப்ப சுவாமி கோயில். இந்தக் கோயிலுக்கு பென்னாகரம், மடம், கூத்தபாடி, காவேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து தரிசனம் செய்வா்.
இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலா் பெலாமலை முனியப்ப சுவாமி சிலைக்கு வியாழக்கிழமை இரவு தீயிட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்ய வந்த பக்தா்கள், முனியப்ப சுவாமி சிலை கருகி இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தனா். சுவாமி சிலைக்குத் தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.