தருமபுரி

முகக் கவசம் அணியாத கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

DIN

பென்னாகரம் பகுதிகளில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 3,400-ஐ பேரூராட்சி ஊழியா்கள் அபராதமாக வசூலித்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீ நுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பென்னாகரம் பேருராட்சி நிா்வாகத்தின் சாா்பில் செயல் அலுவலா் கீதா தலைமையிலான குழுவினா், பென்னாகரம் பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது, முகக்கவசம் அணியாத கடை உரிமையாளா்கள் இருந்ததைக் கண்டு அவா்களுக்கு ரூ. 200 வீதம் 17 பேருக்கு ரூ. 3,400 அபராதம் விதித்தாா். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் ராஜரத்தினம் உள்ளிட்ட அலுவலக பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT