முகப்பு
தருமபுரி

சாலை விபத்து: படுகாயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய கோ.க.மணி

பென்னாகரம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை, பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.க.மணி மீட்டு சிகிச்சைக்காக அரசின் இலவச மருத்துவ சேவை வாகனத்தில் அனுப்பி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

பென்னாகரம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை, பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.க.மணி மீட்டு சிகிச்சைக்காக அரசின் இலவச மருத்துவ சேவை வாகனத்தில் அனுப்பி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசனின் மகன் ஸ்ரீகாந்த் (20). இவா், பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அரங்காபுரம் பகுதியை சோ்ந்த முனிராஜ் (55) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா்.

இந்த இரண்டு வாகனங்களும் சாலை குள்ளாத்திரம்பட்டி அருகே உள்ள பழைய வேளாண் இயக்குநா் அலுவலகம் எதிரே மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனா்.

இந்நிலையில் சென்னையிலிருந்து பென்னாகரம் பகுதிக்கு வந்து கொண்டிருந்த பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கோ.க.மணி சாலை விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, அரசின் இலவச மருத்துவ சிகிச்சை வாகனத்தை அழைத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.