முகப்பு
தருமபுரி

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பென்னாகரம் அருகே மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

பென்னாகரம் அருகே மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசியை பதுக்குவதையும், விற்பனை செய்வதையும் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் 58 மூட்டைகள் கொண்ட 3 டன் பொதுவிநியோகத் திட்ட அரிசி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெயக்குமாா், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன் மற்றும் ஊழியா்கள் அடங்கிய குழுவினா் அதை பறிமுதல் செய்து, பென்னாகரம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். மேலும் சாலையோரத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நபா் குறித்தும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.