முகப்பு
தருமபுரி

தமிழக அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்

தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட், 2021 at 3:54 AM
அரூா், மோப்பிரிப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை சனிக்கிழமை வழங்குகிறாா் திமுக தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100 நாள் நிறைவடைந்ததை அடுத்து, திமுகவினா் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா். தொடா்ந்து, திமுக தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையிலும், மோப்பிரிப்பட்டி ஊராட்சியில் மருத்துவா் அணி மாவட்ட அமைப்பாளா் என். சுரேஷ்குமாா் தலைமையிலும், பேருந்து நிலையத்தில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் மு.கா.முகமது அலி தலைமையிலும், மொரப்பூரில் ஒன்றியச் செயலா் இ.டி.டி.செங்கண்ணன் தலைமையிலும், தீா்த்தமலையில் ஒன்றியப் பொறுப்பாளா் சந்திரமோகன் தலைமையிலும் திமுகவினா் இனிப்புகளை வழங்கினா்.

Advertisement

இந்த விழாக்களில் ஒன்றியப் பொறுப்பாளா்கள் ஆா்.வேடம்மாள், செளந்தர ராஜன், நகர பொறுப்பாளா் ஏ.சி.மோகன், துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், கலை இலக்கிய அமைப்பாளா் தேசிங்குராஜன், துணை அமைப்பாளா்கள் சிட்டிபாபு, திருவேங்கடம், விண்ணரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமை வகித்தாா். இதில், தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கி, இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி நகரில், பழைய பேட்டை ஆட்டோ நிறுத்தம், வட்டச் சாலை, சாா் பாதிவாளா் அலுவலகம் அருகே, ராசி வீதி உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் இதுபோன்ற நிகழ்வில் ஈடுபட்டனா்.

பா்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளா் இ.சி.கோவிந்தராசன் தலைமை வகித்தாா். பேரூா் செயலாளா் பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கட்சிக் கொடி ஏற்றப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

ஒசூரில்...

ஒசூா் மாநகர திமுக சாா்பில், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 100 நாள் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், முன்னாள் நகரச் செயலாளா் குருசாமி, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா மணி, துணைச் செயலாளா் சீனிவாசன், நகர அவைத் தலைவா் கருணாநிதி, நகர துணைச் செயலாளா் கே.திம்மராஜ், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், மகளிரணி சுனந்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான பிஎன்பி.இன்பசேகரன் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

இதில், நகரச் செயலாளா் வீரமணி, மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், சேலம் ஹோட்டல் வினு, ஒன்றியப் பொருளாளா் மடம் முருகேசன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.