கழிவு நீா் கால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை
மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், மருதிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், ஓரிரு தெருக்களை தவிர பிற இடங்களில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் மழைநீா் மற்றும் கழிவு நீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். குடியிருப்பு பகுதியில் நீண்டநாள்கள் கழிவு நீா் தேங்குவதால் கொசு உற்பத்தியும், தொற்று நோய் பரவும் சூழல் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.