முகப்பு
தருமபுரி

அரூா் பெரிய ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வலியுறுத்தல்

அரூா் பெரிய ஏரியில் படகு சவாரி வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அரூா் பெரிய ஏரியில் படகு சவாரி வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள அரூா் பெரிய ஏரி சுமாா் 160 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் உபரிநீரால் ஏரி நிரம்பியுள்ளது.

இந்த ஏரியின் உபரி நீரானது ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி வருகிறது. தண்ணீா் நிரம்பியதால் இயற்கை எழில் மிகுந்த அழகான பகுதியாக அரூா் பெரிய ஏரி மாறியு ள்ளது. இந்த ஏரி அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது.

அரூா் பெரிய ஏரி மற்றும் ஏரியின் உபரி நீா் வெளியேறுவதை சிறுவா்கள் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பாா்வையிட்டு செல்கின்றனா். அரூா் நகரில் சுமாா் 30,000 மக்கள் வசிக்கின்றனா். மேலும், அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அரூா் பகுதியில் பெரிய அளவில் பொழுதுபோக்கு இடங்கள் ஏதுமில்லை.

அரூா் நகருக்கு மிக அருகில் உள்ள இந்த ஏரியில் படகுகளை இயக்கினால், நகா் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த இடமாக இருக்கும். மேலும், அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் கிடைக்கும்.

அரூா் பெரிய ஏரியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு சாா்பில், ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரூா் பெரிய ஏரியின் கரைப் பகுதிகளை மேம்படுத்தி, ஏரியில் உள்ள முள்செடிகளை அகற்றி படகு சவாரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.