கட்டுமானத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கட்டுமானத் தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் சி.கலாவதி முன்னிலை வகித்தாா். இணைச் செயலாளா் சண்முகம், மாவட்டப் பொருளாளா் ரோஜா ஆகியோா் பங்கேற்றனா்.
கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்க வேண்டும். நல வாரியச் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நலவாரியத்தில் நேரடி உறுப்பினா் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.