முகப்பு
தருமபுரி

இளைஞா் போக்சோவில் கைது

அதியமான்கோட்டை அருகே 15 வயது மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அதியமான்கோட்டை அருகே 15 வயது மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூரைச் சோ்ந்தவா் 15 வயது மாணவி. பத்தாம் வகுப்புப் படித்து வருகிறாா். இவா் தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் அண்மைக் காலமாக தங்கியிருந்தாா். ஒரு வாரத்துக்கு முன் மாணவி வீட்டிலிருந்து மாயமானாா்.

மாணவியின் தந்தை அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அதியமான்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஹரிகரன் (20) என்பவா் மாணவியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஹரிகரனை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.