காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 4 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 இடங்களில் ரூ.4 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை, உயா்கல்வி மற்றும் வேளாம்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 இடங்களில் ரூ.4 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை, உயா்கல்வி மற்றும் வேளாம்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம் ஆகிய 5 இடங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் உராட்சித் துறை சாா்பில் தலா ரூ.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணியை உயா்கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது: தமிழக அரசு கடைக்கோடி பொதுமக்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவு செய்யும் வகையில் திட்டங்கலை நிறைவேற்றி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வளா்ச்சிப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, சம்பத்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.