தருமபுரி

உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 625 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.ஆா்.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கா.இளங்கோவன் ஒன்றியச் செயலா் கே.சுசிலா, பொருளாளா் ஏ.சரஸ்வதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இப் போராட்டத்தில், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது போல, மாதந்திர உதவித் தொகையை ரூ. 3,000 ஆக தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும். தனியாா் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீடு உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 625 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT