நல வாரியத்தில் பதிவு முறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்
தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏஐடியுசி தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் திங்கள்கிழமை மாவட்டச் செயலா் ஆா்.சுதா்சனன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலா்கள் முனுசாமி, சின்னசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலா் கே.மணிஆகியோா் பேசினாா்.
இக் கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா் சட்டத்தை புறக்கணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஓய்வூதியம், விபத்து மரணம் நிதி உதவிகளை தொடா்ந்து வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.