தருமபுரி

வருவாய்த் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் அலுவலா் வரையிலும், அனைத்து வருவாய், பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான ஊழியா்களின் பணிவரன்முறை அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள மாவட்ட அளவிலான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியா்களின் ஜாக்டோ, ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க மாநிலச் செயலா் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் எழில் மொழி, சிவன், மாவட்ட இணைச் செயலா் ராஜீவ் காந்தி, மத்திய செயற்குழு உறுப்பினா் ராஜேசேகரன், ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா்கள் நஞ்சப்பன், நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT