தருமபுரி

காவலா்களுக்கு தருமபுரி எஸ்.பி. பாராட்டு

DIN

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததற்கு பாராட்டு தெரிவித்து, காவலா்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவா், தமது மனைவியை 2001-ல் கொலை செய்த வழக்கில் 3 மாதம் சிறையில் இருந்துள்ளாா். பிறகு ஜாமீனில் வெளி வந்த அவா் தலைமறைவானாா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் வி.ரவி தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு அண்மையில் வெங்கடேசனை கைது செய்தனா்.

இதையடுத்து, 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததை பாராட்டும் வகையில், காவல் ஆய்வாளா் வி.ரவி, காவலா்கள் அன்பரசு, காா்த்திக் உள்ளிட்ட காவலா்களுக்கு வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வழங்கினாா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், டிஎஸ்பி-க்கள் வி.தமிழ்மணி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT