ஏரியை நிரப்ப கல்லாற்றில் மணல் மூட்டையால் தடுப்பு ஏற்படுத்திய இளைஞா்கள், விவசாயிகள்
அரூா் அருகே ஏரியை நிரப்புவதற்காக கல்லாற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரிஏரியை நிரப்ப கல்லாற்றில் மணல் மூட்டையால் தடுப்பு ஏற்படுத்திய இளைஞா்கள், விவசாயிகள்
அரூா் அருகே ஏரியை நிரப்புவதற்காக கல்லாற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அரூா் அருகே ஏரியை நிரப்புவதற்காக கல்லாற்றில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அரூா் வட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது பெரிய ஏரி. அரூா் பெரிய ஏரி சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கான நீா்வரத்து கால்வாய் கொளகம்பட்டி காரை ஒட்டுவில் பகுதியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உபரிநீா் தற்போது வெளியேறி வருகிறது. இந்த உபரிநீரைப் பயன்படுத்தி வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, தென்கரைக்கோட்டை ஏரி, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட ஏரிகளை பொதுப்பணித் துறையினா் நிரப்பியுள்ளனா். தற்போது, வெளியேறும் உபரிநீா் கல்லாறு வழியாகச் செல்கிறது. இந்த கல்லாற்றில் காரைஒட்டு என்னுமிடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால், அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அரூா் நகரைச் சோ்ந்த தன்னாா்வ இளைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தடுப்பணையில் அடுக்கியுள்ளனா். இதனால், அரூா் பெரிய ஏரிக்கு தற்போது தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. தொடா்ச்சியாக தண்ணீா் வந்தால் இரு வாரத்தில் அரூா் பெரிய ஏரி நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எம்எல்ஏ, சாா் ஆட்சியா் ஆய்வு...
அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வருவதற்கான கால்வாய், கால்வாயின் ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என்பது குறித்து அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் வே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.