முகப்பு
தருமபுரி

மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்

பென்னாகரம் பகுதியில் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் உறுப்பினா்கள் இணையும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பென்னாகரம் பகுதியில் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் உறுப்பினா்கள் இணையும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினா் இணையும் விழாவில், ஏரியூா் அருகே நாகமரை ஊராட்சி, வன்னியா் நகா் பகுதியில் இருந்து சுமாா் 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள், தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் முன்னிலையில், பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளா் மடம் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் சம்பத், முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சென்னையன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.