முகப்பு
தருமபுரி

ரூ.1.53 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.53 கோடியில் 22 வளா்ச்சித் திட்டப் பணிகளை உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.53 கோடியில் 22 வளா்ச்சித் திட்டப் பணிகளை உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சூடானூா், பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு ஆகிய ஊராட்சியில் ரூ.1.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், காடுசெட்டிப்பட்டி கோணப்பள்ளம் ஏரிக் கால்வாயில் இருவேறு இடங்களில் தலா ரூ. 6.79 லட்சத்தில் தடுப்பணைகள், நாகனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 836 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவா் அமைக்கும் பணி, பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் ரூ. 5.84 லட்சத்தில் சிறுபாலம் உள்பட கழிவு நீா்க்கால்வாய், சாலை அமைத்தல் உள்ளிட்ட 22 வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இவ் விழாவில், சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், வட்டாட்சியா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தண்டபாணி, விமலன், ஒன்றியக்குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.