தருமபுரி

சுய உதவிக்குழுவினருக்கு ரூ.19.20 லட்சம் கடனுதவி

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.19.20 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

கெரகோட அள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில், உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், 3 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 39 மகளிருக்கு ரூ. 19.50 லட்சம் கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில், 131 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன், நகையீட்டின் பேரில் கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்ட கால கடன்கள், மத்திய காலக்கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனுதவிகளைப் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி),வே.சம்பத்குமாா் (அரூா்), சாா் ஆட்சியா் மு.பிரதாப், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், துணைப் பதிவாளா் பாா்த்தசாரதி, வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT