தருமபுரி

ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

DIN

அரூா்: போசிநாயக்கனஹள்ளி அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள போசிநாயக்கனஹள்ளியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில். இந்த திருக்கோயில் மேம்பாட்டு பணிகள் சமாா் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. கோயில் கலசத்தின் மீது கங்கை நதி நீா் உள்பட 13 புனித தீா்த்தங்கள் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், போசிநாயக்கனஹள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT