கரோனா தடுப்பூசி முகாம்
அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி, பாப்பிசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், 18 வயது முதல் அனைத்து வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் 250 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், அரசு மருத்துவா்கள் திவ்யா, திலகா், சுகாதார ஆய்வாளா் கரிகாலன், பணியாளா்கள் செல்வகுமாா், சாந்தி, ஊராட்சி மன்றத் தலைவா் கல்யாண சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.