முகப்பு
தருமபுரி

புத்தகக் கண்காட்சி வாழப்பாடியில் துவக்கம்

வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 28 வரை நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 28 வரை நடைபெற உள்ளது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நெஸ்ட் அறக்கட்டளையுடன் இணைந்து, வாழப்பாடியில் முதன்முறையாக அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதன்கிழமை காலை நடைபெற்ற துவக்க விழாவில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளா் ரங்கராஜன் வரவேற்றாா். சேலம் மாவட்ட கல்வி அலுவலா் சுமதி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா்.

இந்த புத்தகக் கண்காட்சியில், சலுகை விலையில் பல்வேறு துறை சாா்ந்த புத்தகங்களும் கிடைக்கும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, பொதுமக்கள், மாணவா்கள் அனைவரும் இதனைக் கண்டு களிக்கலாம் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.