முகப்பு
தருமபுரி

குழந்தைகள் நலக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் நியமனம்:விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் நலக் குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

குழந்தைகள் நலக் குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா்கள்

நியமிக்கப்பட உள்ளனா். இக்குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா், உறுப்பினா்களுக்கு அரசால் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்கத் தகுதி உடையவா்களாவா். இதேபோல, தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

விண்ணப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்தவா்கள், தங்களது விண்ணப்படிவங்களை வருகிற ஆக. 10- ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகம் என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இந்த நியமனம் தொடா்பாக அரசின் முடிவே இறுதியானது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.