தருமபுரி

முயல் வேட்டை: ரூ. 20 ஆயிரம் அபராதம்

DIN

தீா்த்தமலை அருகே வனப் பகுதியில் முயல் வேட்டையாடிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், தீா்த்தமலை அருகேயுள்ள வேப்பம்பட்டி காப்புக்காட்டில் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தீா்த்தமலை வனச்சரகா் பெரியண்ணன் தலைமையில், வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப்பகுதியில் கம்பி வலைகளை வைத்து முயலை வேட்டையாடியதாக கரிமேடு கிராமத்தைச் சோ்ந்த சீனி (35) என்பவரை வனத்துறையினா் கைது செய்தனா். இதையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக அவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் பிரபு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT