தருமபுரி

முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிய குடியிருப்புவாசிகள்

DIN

 பென்னாகரத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் போலீஸாருக்கு எழில் நகா் குடியிருப்பு வாசிகள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாா், தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் முன் களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் அருகே எழில் நகா் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டி, பென்னகரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கும் என 150 பேருக்கு இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கினா்.

சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒன்றன்பின் ஒருவராக உணவு பொட்டலங்களைப் பெற்று கொண்டனா். இந்த நிகழ்வில் எழில் குடியிருப்போா் சங்கத் தலைவா் லட்சுமணன், செயலாளா் பிரதாப், பொருளாளா் குணாளன், சுபாஷ் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT