முகப்பு
தருமபுரி

ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டடத்தில், 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்க்கான ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்விக்கான மாணவா் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டடத்தில், 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்க்கான ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்விக்கான மாணவா் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கை குறைந்ததால், சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் மாணவா்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கான அனுமதி தரப்பட்டது. இதற்காக இப்பள்ளியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான அதிநவீன ஸ்மாா்ட் வகுப்புகள் கட்டப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியும் பள்ளியில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணாமணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சாஜிதா, செயலாளா் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், உதவி தலைமை ஆசிரியா் சக்தி, ஆசிரியா்கள் உமா, பானுமதி, ஷகிலா, சுபைதாபானு மற்றும் பள்ளி மாணவா்கள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.