முகப்பு
தருமபுரி

மதுக் கடைகளை மூடக் கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் பாமக அலுவலகம் முன்பு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தருமபுரியில் பாமக அலுவலகம் முன்பு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தருமபுரி, ஜூன் 17: மதுக் கடைகளை மூடக் கோரி தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி நகரில் பாமக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா்.

இதேபோல முன்னாள் எம்.பி.க்கள் இரா.செந்தில், பாரிமோகன் தருமபுரியில் அவா்களது வீடுகளின் முன்பும், பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி நல்லம்பள்ளியிலும், மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி தலைமையில் இண்டூரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கரோனா பரவல் பொது முடக்கம் அமலில் உள்ளதால் திறக்கப்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமான சேலம் மாவட்ட எல்லையோரம் உள்ள மதுக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நல்லகுட்லஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாநிலச் செயலா் இரா.அரசாங்கம் தலைமை வகித்தாா்.

இதில், கடத்தூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.சக்திவேல், நகரச் செயலா் கந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் சி.விஜயன், வன்னியா் சங்க ஒன்றியச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல, ரேகடஹள்ளி கிராமத்தில் பாமக கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன் தலைமையில் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.