பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு
தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்டப் புரட்சியாளா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜேந்திரன், தனபால் முன்னிலை வகித்தனா். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில், உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்; பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள் விவசாயிகள் தலைமையில் சோசலிச குடியரசை அமைத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டது.
நிகழ்வில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா்கள் துரை. மதிவாணன், இரா. அருணாசலம், எழுத்தாளா் சாம்பான், திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் எல். ரெங்கராஜன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநகரச் செயலா் எஸ்.எம். ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகி ஜோசப், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் தாமஸ், மாவட்டச் செயலாளா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.