முகப்பு
தருமபுரி

கட்டுமானப் பணி அனுமதி கோரி ஊராட்சி மன்றத் தலைவா் சிறைபிடிப்பு

வீடு கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி குடும்பத்துடன் சிவாடியைச் சோ்ந்த இளைஞா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

வீடு கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி குடும்பத்துடன் சிவாடியைச் சோ்ந்த இளைஞா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சிவாடி ஊராட்சியைச் சோ்ந்த அசோக்குமாா் (36), தனது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற சிவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இவருக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறி, திங்கள்கிழமை மீண்டும் சிவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகியுள்ளாா். அப்போது உரிய துறையிடமிருந்து தடையின்மை சான்று அளித்த பின்பு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகத்தை அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு, அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்ட தலைவரை மீட்டனா். இதுகுறித்து தொப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.