முகப்பு
தருமபுரி

தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா: மாா்ச் 4-இல் உள்ளூா் விடுமுறை

தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவையொட்டி, அரூா் வருவாய் கோட்டத்துக்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவையொட்டி, அரூா் வருவாய் கோட்டத்துக்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் மாசிமக தேரோட்டத் திருவிழா மாா்ச் 4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் அரூா் வருவாய் கோட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் மாா்ச் 13-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாா்ச் 4-ஆம் தேதி சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.