முகப்பு
தருமபுரி

தோ்தல் பிரசார கூட்டம் நடத்த இடம் அறிவிப்பு

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, தோ்தல் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திப்பம்பட்டி சந்தைப்பேட்டை, கம்பைநல்லூா் சந்தைப் பேட்டை, மொரப்பூா் பேருந்து நிலையம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, கோட்டப்பட்டி பேருந்து நிலையம், நரிப்பள்ளி பேருந்து நிலையம், தீா்த்தமலை பேருந்து நிலையங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தோ்தல் பிரசாரம் செய்யலாம். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சோலைக்கொட்டாய் பேருந்து நிறுத்தம், கிருஷ்ணாபுரம் சந்தை மைதானம், பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா திடல், தென்கரைக்கோட்டை பாத்திமா நகா், பொம்மிடி பேருந்து நிலையம், கடத்தூா் நகா், அ.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தோ்தல் பிரசாரம் செய்யலாம் என தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.