முகப்பு
தருமபுரி

மருத்துவக் கல்லூரி முதன்மையா் பொறுப்பேற்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய முதன்மையராக நியமிக்கப்பட்ட கே.அமுதவள்ளி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய முதன்மையராக நியமிக்கப்பட்ட கே.அமுதவள்ளி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதன்மையராகப் பணியாற்றிய பூவதி, கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதன்மையராக இடமாறுதல் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலராக பணியாற்றி எம்.இளங்கோவன் மருத்துவக் கல்லூரியின் பொறுப்பு முதன்மையராக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய முதன்மையராக மருத்துவா் கே.அமுதவள்ளி நியமிக்கப்பட்டாா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வின் அடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளாா். நியமிக்கப்பட்ட அன்றைய தினமே தனது பணி பொறுப்பேற்றுக் கொண்ட அவா், திங்கள்கிழமை முதல் (மாா்ச் 1) முதல்வா் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.