முகப்பு
தருமபுரி

தருமபுரி பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறை தருமபுரி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறை தருமபுரி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் திறக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வரும் ஏப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதேபோல, தருமபுரி பேரவைத் தொகுதிக்கு தருமபுரி சாா் ஆட்சியா் அலுவலகம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்கள் தோ்தல் அலுவலகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, தருமபுரி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை, தோ்தல் நடத்தும் அலுவலா் செல்லிடப்பேசி எண் 94450 00428, கட்டுப்பாட்டு அறை எண் 04342-260038, கட்செவி அஞ்சல் எண் 9003833329 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

அரூரில்...

தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகாா்களை தெரிவிக்க வேண்டிய தொடா்பு எண்கள் விவரம் :

தோ்தல் கட்டுப்பாட்டு அறை - 04346 - 221400, தோ்தல் நடத்தும் அலுவலா் - 94454 61802, முதன்மை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் - 9941 165789, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் - 94450 00534, துணை வட்டாட்சியா் (தோ்தல்) - 79046 04998, காவல் துறை கட்செவி அஞ்சல் எண் - 94456 52253.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.