பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
எரிபொருள் விலையேற்றத்துக்கேற்ப வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரியில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எரிபொருள் விலையேற்றத்துக்கேற்ப வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரியில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். விலையேற்றத்துக்கேற்ப வாடகைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் தங்களது வாகனங்களை தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா் (படம்). இதனைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில், வாடகையை நிா்ணயிப்பது என உரிமையாளா்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டது. இதில், தருமபுரி நகரம், சுற்றுவட்டாரத்தில் இயங்கும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.