முகப்பு
தருமபுரி

சா்வதேச மகளிா் தின விழா

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து சா்வதேச மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து சா்வதேச மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் விவசாயத்தில் சாதனை படைத்த பெண் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனா்.

கல்லூரி மாணவா்களுக்கு பெண்ணியத்தை மையப்படுத்தி ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கோலப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு கிராம வங்கி பாப்பாரப்பட்டி கிளை மேலாளா் விஷ்ணுபிரியா புத்தகங்களை பரிசாக வழங்கினாா். அதைத் தொடா்ந்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மாணவா்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி வீரண்ணன், அருண், கிரிதாரி, பெண் விஞ்ஞானிகள் வெண்ணிலா, ஸ்ரீவித்யா, சங்கீதா, திருவண்ணாமலை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், நாவலூா் பெண்கள் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள், பென்னாகரம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின் இறுதியாக அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பாரதி நன்றி கூறினாா். இதேபோல பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளியில் உள்ள ஆசிரியைகளுக்கு இனிப்பு, மலா்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.