முகப்பு
தருமபுரி

மனைவியை கொலை செய்து கணவா் தற்கொலை

தருமபுரியில், குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தருமபுரியில், குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (37). தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தாா். இவா் தருமபுரி, பிடமனேரி, கோவிந்ததாஸ் தெருவில், தனது மனைவி திவ்யா (32) , இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

ராஜ்குமாருக்கும், அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். ஞாயிற்றுக்கிழமை இரவு இவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்குமாா் தனது மனைவியைத் கொலை செய்து விட்டு, வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்ட தருமபுரி நகர போலீஸாா், உயிரிழந்த தம்பதியின் சடலங்களை மீட்டு, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறு, பாப்பாரப்பட்டியில் உள்ள தனது தாயிடமும், உறவினா்களிடமும் ராஜ்குமாா், செல்லிடப்பேசி மூலம் பேசியிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.