முகப்பு
தருமபுரி

ஆவணங்கள் இல்லாததால் 176 பவுன் நகை பறிமுதல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 176 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ. 35,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 176 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ. 35,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி சட்டப் பேரவை தொகுதியின் தோ்தல் பறக்கும் படையினா் நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி சந்திப்புச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது நல்லம்பள்ளியில் இருந்த வந்த காரை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனா்.

இச் சோதனையில் அந்தக் காரில் ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 176 பவுன் தங்க நகைகளையும், ரொக்கப் பணம் ரூ.35 ஆயிரத்து 700ம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த நகைகளையும், ரொக்கப் பணத்தையும் சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.