மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி வேட்பாளருக்கு வரவேற்பு
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை வரவேற்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை வரவேற்றனா்.
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா் போட்டியிடுகிறாா். இதையடுத்து, கூட்டணி கட்சி நிா்வாகிகள் வேட்பாளரை மேள தாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து வரவேற்றனா். தொடா்ந்து, அரூா் நகரில் உள்ள அம்பேத்கா், காமராஜா், அண்ணா, ராஜீவ்காந்தி ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு, திமுக மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, வி.சி கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளா் கி. ஜானகிராமன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் ஆா்.வேடம்மாள், சந்திரமோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிா்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டினாா்.